ரெடியாக இருங்க…! TNPSC குரூப் 2, 2A கலந்தாய்வு தேதி குறித்து முக்கிய அப்டேட் வெளியானது…! முழு விவரம்

அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2A பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகொண்ட குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வாணை செயலாளர் கோபால சுந்தர் ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II அறிவிக்கை எண்.03/2022 நாள்: 23.022022, தொகுதி-II நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு 12.022024 முதல் 17.02.2024 வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

1newsnationuser2

Next Post

நடிகர் விஜய் பாஜகவின் பி டீம்!… விமர்சனமும், அண்ணாமலையின் அதிரடி பதிலும்!

Sun Feb 4 , 2024
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவர் பாஜகவின் பி டீம் என்ற விமர்சனத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். “என் மண் என் மக்கள்” யாத்திரையின் ஒரு பகுதியாக, நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். முன்னதாக, குடியாத்தம் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கள் இயக்கத்தினர் இறக்கும் முதல் கள்ளை தான் குடிக்கத் தயாராக இருப்பதாக […]

You May Like