இனி சென்னைக்கு வரும் அனைத்து விரைவு பேருந்துகளும்… அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய உத்தரவு..

வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து விரைவு பேருந்துகளும் தாம்பரம் வழியாக கோயம்பேடு செல்ல வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் விரைவு பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும். தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும்.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவார்கள்.. மேலும் நமது கழகத்தின் வருவாயும் அதிகரிக்கும்.. மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….! ஆசிரியர் உட்பட 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது……!

Fri Feb 17 , 2023
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. என்னதான் தவறு செய்பவர்களை அரசாங்கம் தண்டித்தாலும் சமூகத்தில் சுய ஒழுக்கம் என்பது இல்லாத வரையில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் குறையாது என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது. அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே எலத்தகிரி பகுதியில் இருக்கின்ற அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் எல்லோருக்கும் […]

You May Like