இனி சர்க்கரை நோயாளிகளும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்!…. 5 இனிப்பு வகைகள் இதோ!

இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோயாளிகள், இனிப்பு சுவை குறைவாக கொண்ட பழங்கள், ஐஸ்கிரீம்களை சாப்பிடலாம். இதுகுறித்து தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் சரியான தூக்கமின்மை, உணவு பழக்கங்கள், மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது உள்ளிட்டவைகளே காரணமாகும். இந்தநிலையில், சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களோ இல்லையோ, வாய்க்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது, மிகவும் அவசியம். மற்றவர்கள் சாதாரணமாக தின்னும் தின்பண்டங்கள்கூட, இவர்களுக்கு, ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஆனால், இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியாத சக்கரை நோயாளிகள், இனிப்பு சுவை குறைவாக கொண்ட பழங்கள், ஐஸ்கிரீம்களை சாப்பிடலாம். அதாவது, பெர்ரி வகையிலான பழங்களை சாப்பிடலாம். இதனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற தாகம் இருக்காது. பெர்ரி பழங்களை தவிர, சிட்ரஸ், மாதுளை, ஆப்பிள் வகை பழங்களையும் அடிக்கடி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

வாழைப்பழங்களில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உங்களுக்கு இனிப்பு சாப்பிடணும் என்று தோன்றுபோது, ஒரு அரை வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுங்கள். இது ஸ்வீட் சாப்பிட்ட திருப்தியை தரும். ஒருவேளை அப்போதும் இனிப்புத் தாகம் அடங்கவில்லை என்றால், வாழைப்பழங்களில் பனிக்கூழ் செய்து விற்கப்படுகிறது. அதை சாப்பிடலாம்.

தானியங்கள், பழங்கள் கொண்ட செய்யப்படும் ஃப்ரூட் கேக்குகளில் பெரியளவு இனிப்புச் சுவை இருக்காது. இதற்கு சரியான உதாரணம் பிளம் கேக். இனிப்புச் சுவையை சாப்பிட வேண்டும் என்கிற வேட்கை உருவாகும் போது, நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற கேக்குகளை சாப்பிடலாம்.கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் சாக்லேட்டுகளில் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக, டார்க் சாக்லேட் என்று சொல்லப்படுகிற மிட்டாய்களை வாங்கி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம். இதன்மூலம் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகாரிக்காது, மேலும் இதில் கானப்படும் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் இன்சுலின் சுரப்பு ஹார்மோனைத் தூண்டுகின்றன.

Kokila

Next Post

மக்களே...! ரேஷன் கடைகளில் நாளை காலை 10 முதல் 1 மணி வரை மட்டுமே...! மிஸ் பண்ணிடாதீங்க...!

Fri Feb 10 , 2023
பொது விநியோகத்திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி- 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ 11.02.2023 அன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை […]

You May Like