இனி வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்… இந்திய ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்..

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணத்தின் போது இனி, வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனம், ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. வாட்ஸ்அப் மூலம் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..

ஐஆர்சிடிசி ஏற்கனவே அதன் இணையதளமான www.catering.irctc.co.in மற்றும் இ-கேட்டரிங் செயலியான Food on Track மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.. இதற்காக ரயில்வே, வணிக வாட்ஸ்அப் எண்ணை +91-8750001323 தொடங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்கள் மற்றும் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளுக்காக வாட்ஸ்அப் தொடர்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.. இட்ன்ஹ சேவை குறித்த வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ரயில்வே மற்ற ரயில்களிலும் இதை செயல்படுத்தும்.

வாட்ஸ்அப் மூலம் உணவை எவ்வாறு ஆர்டர் செய்யலாம்..?

  • டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வணிக வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு செய்தி அனுப்பப்படும்.
  • வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் இருந்து நேரடியாக ரயில் நிலையங்களில் உள்ள தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து உணவை முன்பதிவு செய்யலாம்.
  • இதற்குப் பிறகு, வாட்ஸ்அப் எண் இரு வழி தொடர்பு தளமாக இயக்கப்படும். பின்னர் AI பவர் சாட்போட் (AI power chatbot) பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகளின் அனைத்து வினவல்களையும் கையாளும்.

ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

Maha

Next Post

மக்களே அலர்ட்...! யாரும் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டாம்...! காவல்துறை எச்சரிக்கை...!

Tue Feb 7 , 2023
தருமபுரியில் ஜெய்கணபதி பைனான்ஸ் நிறுவனம் நிதி மோசடி செய்துள்ளதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோட்டில் உழவர்‌ சந்தை அருகில்‌, ஸ்ரீ ஸ்ரீ ஜெய்கணபதி பைனான்ஸ்‌ என்ற பெயரில்‌ நிதி நிறுவனம்‌ நடத்தி, அந்த நிதி நிறுவனத்தில்‌ வைப்பு தொகை பெற்றும்‌, மாதாந்திர எலச்‌ சீட்டு, மற்றும்‌ சிறு சேமிப்பு திட்டம்‌ ஆகியவைகளை நடத்தி பண மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின்‌ பேரில்‌ சேலம்‌ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் […]

You May Like