அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான்.. ரஜினியின் அரசியல் முடிவுக்கு வரவேற்பு..

ரஜினியின் அரசியல் குறித்து பொதுவாகவே கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அவரின் இன்றைய பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

rajini seeman

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் தான் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன், எனப் பலர் கூறிவருகின்றனர் என்று தெரிவித்த ரஜினி, 2017-ம் ஆண்டில் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, முதலமைச்சர் பதவியெல்லாம், தன்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். முதல்வராக வேண்டும் 1996-ம் ஆண்டிலேயே தனக்கு வாய்ப்பு வந்தபோது முதல்வர் ஆகியிருக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசியல் எழுச்சி ஏற்பட்டால், அதன்பிறகு அரசியலுக்கு வருவதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த எழுச்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்றும், மூலை முடுக்கெல்லாம் அதனை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

இம்முறையும் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா அல்லது இல்லையா என்பதை தெளிவாக கூறாததால், அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். மேலும் மக்கள் எழுச்சி பரவிய பிறகு நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று அவர் கூறியுள்ளதும், அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வர போவதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

rajini n

வேறு சிலரோ மக்கள் எழுச்சி எப்போது ஏற்படுவது, ரஜினி எப்போது அரசியலுக்கு வருவது எனவும், அரசியல் வருகையை தள்ளிப்போடவே அவர் இப்படி பேசியிருக்கிறார் என கூறி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்தும் பொதுவாகவே கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அவரின் இன்றைய பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

தேவையில்லாத வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள்.. கொரோனா குறித்து பிரதமர் மோடி ட்வீட்..

Thu Mar 12 , 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தேவையில்லாத வெளிநாட்டு பயணங்களை பொதுமக்கள் தவிர்க்குமாறு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி “ கோவிட் 19 – கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, அரசு முழுமையான விழிப்புடன் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்கள், மக்களை பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை விரைவாக எடுத்துள்ளன. விசாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது […]
modi

You May Like