கொரோனாவால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர்.. சுரேஷ் அங்கடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. ஐபிஎல்….முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை வெற்றிபெறுமா? கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு! தீபிகா படுகோனுக்கு போதைப்பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்…காரணம் இதுதான்! 5வது லீக் போட்டி…வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துமா மும்பை அணி! ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவை நீங்களே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்..! எப்படி தெரியுமா? மனிதனை விழுங்கும் ராட்சத எலி?…சாக்கடையில் இருந்து வெளியேறியதால் ஓட்டம் பிடித்த மக்கள்! சொந்த வீடு வாங்கணுமா..? உங்க அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் ரூ. 1500 இருந்தால் போதும்.. புதிய வீட்டுக் கடன் திட்டம்.. அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றி யாருக்கு…நீயா, நானா என மாறி மாறி உண்மையை போட்டு உடைக்கும் வேட்பாளர்கள்! எனக்கே அது நடந்திருக்கு..! நடிகை கஸ்தூரி ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! பள்ளிக் கல்வித்துறையின் திடீர் உத்தரவு.. அனைத்து பள்ளிகளும் இந்த விவரங்களை அனுப்ப வேண்டும்.. CM பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கம்? உண்மைக்கு புறம்பான தகவல்! இந்த மாதிரி ஒரு உருளைக்கிழங்க யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..! அறுவடை செய்த விவசாயி மகிழ்ச்சி..! சானிட்டைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்த சிறுவன்..! டிவியில் விரிசல் விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை..! 50 பெண்களை கதறவிட்ட டிக்கிலோனா டிக்கிமணி..! கள்ளக் காதலன்களை விரட்டிவிட்டு காதலிகளுடன் உல்லாசம்..! இவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா!

"ஒரு ஸ்பூன் மேஜிக் சட்னி" – எதுக்கு தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் “ஒரு ஸ்பூன் மேஜிக் சட்னி” செய்யும் முறையை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் விளக்கி உள்ளார்.

1592384906112508 1

உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்வது மட்டும்தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்ர். அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் தினமும் உடற்பயிற்சி செய்தல், காய்கறிகளை அதிகம் சாப்பிடுதல், கபசுர குடிநீர் பருகுதல், வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுதல் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லவ்லீன் கௌர் (Lavleen Kaur) நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய, எளிதில் வீட்டிலே தயாரித்துச் சாப்பிடும் சட்னி ஒன்றின் சமையல் குறிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த சமையல் குறிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

1592384847914

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘ஒரு ஸ்பூன் மேஜிக்’ ஒன்றை இனி சேர்த்துக்கொள்வோம். அந்த மேஜிக் வேறு ஒன்றும் இல்லை; ஒரு ஸ்பூன் சட்னி தான். இது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்” என்று சமையல் குறிப்போடு கூறியிருக்கிறார்.

தேவையான பொருட்கள்

மாம்பழம் – 1
பூண்டு – 3
இஞ்சி – சிறிதளவு
வெங்காயம் – பாதியளவு
தக்காளி – 1
மாதுளை விதைகள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
ஓமம் இலை – 5
துளசி இலை – 6
புதினா இலை – 1 கப்
கொத்தமல்லி இலை – 1 கப்
பச்சை மிளகாய் – 3
கல் உப்பு – தேவையான அளவு
புளி / சர்க்கரை – தேவைப்படின் சேர்த்துக்கொள்ளவும்.

மேலே கூறியிருக்கும் பொருள்கள் அனைத்தையும் நன்றாகக் கலந்து, பசையாகும் வரை அரைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான்… மேஜிக் சட்னி ரெடி… தினமும் உணவு உட்கொள்ளும் போது சிறிதளவு இந்தச் சட்னியை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் உணவும் சுவையாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

1592384861321

இந்த சட்னி குறித்து கௌர் கூறுகையில்,” இந்தச் சட்னியில் உள்ள மாம்பழம், தக்காளி, மாதுளம்பழ விதை மூலம் வைட்டமின் சி அதிகமாகக் கிடைக்கும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி – ஆக்சிடன்ஸ் ஆகியவை உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதில் பயன்படுத்தும் இலைகள் செரிமானப் பிரச்னையைப் போக்கும் ” என்றும் தெரிவித்திருக்கிறார்

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சரியாகும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும். சட்னியில் உள்ள வைட்டமின் சி – ஆனது உடலில் இரும்புச் சத்தை கிரகிக்க உதவும். ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்தச் சட்னி உகந்தது. கர்ப்பிணிகள் மற்றும் வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் இந்த சட்னியைத் தவிர்த்து விடுவது நல்லது என்றும் தெரிவித்திருக்கிறார்.

1newsnationuser4

Next Post

உங்கள் சருமம் அழகுற கடுகு விதையில் ஒரு ஃபேஸ் பேக்...

Wed Jun 17 , 2020
வீட்டிலிருக்கும் கடுகு விதைகள் உங்கள் சருமத்திற்கு எவ்வளவு பயனளிக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆமாம், இந்த ஃபேஸ் பேக்குகளை முகத்தில் தடவுவதன் மூலம், தோல் வெயில் சோர்வதைத்தல், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்குகிறது. முகப்பரு மற்றும் கறுப்பு நிறம் முகத்திலிருந்து நீக்கி முகத்தை பளபளவென வைக்க உதவுகிறது. இத்தகைய இயற்கை முறை விதைகள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நம் சருமத்தை கவனித்துக்கொள்வதற்கும் பயன்படுகின்றன.கடுகு விதைகள் அழகு சாதனங்களில் […]
mustard seeds01

You May Like