மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

புற்றுநோய் பாதித்த மனைவியை கும்பகோணம் டூ புதுச்சேரிக்கு சைக்கிளில் கொண்டுவந்த பாசக்கார கணவர்..!

மனைவிக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரை சைக்கிளில் வைத்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த பாசக்கார கணவரை, மக்கள் வெகுவாக பாராட்டினர்.

83904

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன் (65); இவரது மனைவி மஞ்சுளா (60). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவை புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க அறிவழகன் முடிவு செய்தார்.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் – புதுச்சேரி எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும், எப்படியாவது தனது மனைவிக்கு சிகிச்சையளித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்த அறிவழகன், மஞ்சுளாவை சைக்கிளில் ஏற்றி புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.

இதையடுத்து, மனைவியை சைக்கிளில் அமரவைத்து சீர்காழி, கடலூர் வழியாக 120 கிமீ தூரம் கடந்து, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்.

1586580501520

இடுப்பில் வேஷ்டியும் தோளில் துண்டுமாக வந்த அறிவழகனின் ஏழ்மை நிலையையும், மனைவியை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியையும் கண்டு மனம் இறங்கிய டாக்டர்கள், மஞ்சுளாவை வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இருவருக்கும், ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பிலும், தன்னார்வலர்களின் உதவியின் பேரிலும் உணவு மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கவைத்து மஞ்சுளாவுக்கு உரிய சிகிச்சை அளித்த பின்னர், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி கும்பகோணத்தில் கொண்டுபோய் அவர்கள் வீட்டில் பத்திரமாக இறக்கி விட்டனர்.

மஞ்சுளாவுக்கு அளித்த சிகிச்சைக்காகவும், அவர்களை கும்பகோணம் கொண்டுசேர்த்த ஆம்புலன்ஸுக்காகவும், ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் எந்த கட்டணமும் வாங்கவில்லை.

1newsnationuser4

Next Post

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பா? உடனடியாக தெரிவியுங்கள் - ஸ்டாலின்

Sat Apr 11 , 2020
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அரசு அறிவிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடித்தத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கோல்டன் […]
உச்சநீதிமன்றத்தை நாடுங்கள்..! மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்

You May Like