
சென்னை: சென்னையில் ஒரு வருடமாக பாலியல் கொடுத்த முதியவரால், 15 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் தான் 54 வயதான பால்ராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது வீட்டில், பாட்டி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பாட்டியுடன் 15 வயதான பேத்தியும் வசித்து வந்துள்ளார். இச்சிறுமி பாட்டிக்கு உதவியாக அடிக்கடி ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமிக்கு ஒரு வருடமாக பால்ராஜ் என்பவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் இதனைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் தான் சிறுமி கர்ப்பமாகியிருக்கும் செய்தி பாட்டிக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. விசாரித்ததில் ஒரு வருடமாக தன்னை ரியல் எஸ்டேட் அதிபரான பால்ராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக 15 வயது சிறுமி பாட்டியிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, நடந்த விஷயங்கள் பற்றி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார், பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடமாக சிறுமியின் வாழ்க்கையை நாசம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.