2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

கொரோனா பாதிப்பில் உலகளவில் 7-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில் பாதிப்பு அதிகரிப்பதால் அதிர்ச்சி..

நேற்றிரவு வரை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,88, 883-ஆக அதிகரித்துள்ளதால், உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒரே நாளில்

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 62 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 27 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.

5 லட்சத்திற்கு அதிகமான பாதிப்புகளை கொண்ட பிரேசில் 2-வது இடத்திலும், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் ரஷ்யா 3-வது இடத்திலும் உள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகள் முறையே 4,5,6 இடங்களில் உள்ளன. இந்நிலையில், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இதுவரை 9-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 7-வது இடத்தை பிடித்துள்ளது.

Coronavirus in India

நேற்றிரவு வரை இந்தியாவில் 1,88,883-ஆக அதிகரித்ததால் உலகளவில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 193 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனாவால் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. 21,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முறையே 3,4,5 இடங்களில் உள்ளன.

coro 111

கொரோனாவின் 2-வது அலை எச்சரிக்கையை மீறி பல்வேறு நாடுகள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வரும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன என்பதால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

1newsnationuser1

Next Post

ரோபோக்களிடம் வேலையை பறிகொடுக்கும் மைக்ரோசாஃப்ட் பத்திரிக்கையாளர்கள்...

Mon Jun 1 , 2020
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தானாக இயங்கும் அமைப்புகள் வர உள்ளதால் அங்கு எம்.எஸ்.என். வலைதளங்களில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் வேலையை இழக்கும் ஆபாயம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.என். வலைதளங்களில் பிற செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுத்து, அவற்றிக்கு தலைப்புகளை வைத்து அதற்கேற்ப புகைப்படங்களை வைப்பது என சில பத்திரிக்கையாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த செய்திகளுக்கு முறையான சன்மானமும் நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது இந்த வேலையை […]
19478 microsoft rf

You May Like