"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியா.. கர்நாடகாவில் மேலும் ஒரு பெண்ணுக்கு வைரஸ் இருப்பது உறுதி.. இதுவரை 110 பேர் பாதிப்பு..

கர்நாடாவில் கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உறவினர் பெண் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.

corona

கர்நாடகாவில் 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். இது நாட்டின் கொரோனா முதல் உயிரிழப்பாக கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த முதியவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மூவருக்கு பாதிப்பு இல்லை என்று உறுதியான நிலையில், ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கர்நாடகாவில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் மக்கள், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 17 வெளிநாட்டவர் அடங்குவர்.

school closure corona

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவியுள்ளது. உலகம முழுவதும் 6,420 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1,60,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனா பெருந்தொற்று நோய் பரவும் மையமாக ஐரோப்பாவை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

ம.பியில் தொடரும் அரசியல் குழப்பம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள பாஜக..

Mon Mar 16 , 2020
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அங்கு அரசியல் குழப்பம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. ஜோதிராத்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதால் மத்தியப் பிரதேச அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. அவரைத் தொடர்ந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு தொடர்ந்து 15 மாத கால காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. […]
kamal-nath

You May Like