ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய ஒன்பிளஸ் z மாடலை வெளிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனமான ஒன்பிளஸ் தற்போது அதன் ஒன்பிளஸ் வரிசையில் ஒன்பிளஸ் z மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அந்த மொபைலில் மூன்று பின்புற கேமராக்கள், 90 ஹெர்ட்ஸ் வீதத் திரை, டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பலவற்றைக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
மேலும், ஜூலை 10 ஆம் தேதி ஒன்பிளஸ் இசட் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ.24,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 12 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மற்ற மாடல்களை விட இந்த ஸ்மார்ட்போனின் விலை மலிவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 2இல் ஒரு மாபெறும் நிகழ்வுக்குத் தயாராகிவருவதாக ஆண்டிராய்ட் சென்ட்ரல் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் இதுதொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.