பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ்..! எடப்பாடி தரப்புக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட்..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது. தற்போது பொதுக்குழு கூட்டியதே செல்லாது என்பதே எங்கள் வழக்கு என்றும் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளரை ஓரங்கட்டிவிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், பல கருத்துக்களை முன்வைத்தார்.

Madras HC expresses shock over dress code row, asks if country or religion  is paramount- The New Indian Express

இதற்கிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தும் உரிமையை பறிக்கக் கூடாது என்றும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். கட்சி நலனுக்காக வழக்கு தொடுத்திருப்பதாக கூறும் ஓபிஎஸ் தன்னையே எதிர்மனுதாரராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார்.

TN: EPS-OPS Tussle Continues Over Sasikala's Re-entry to AIADMK | NewsClick

கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழுவை கூட்டுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தார்.

Chella

Next Post

நாலு வயது சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய பரபரப்பு சம்பவம்: முன்விரோதம் காரணமா? சந்தேகத்தில் போலீசார் ...!

Thu Jul 7 , 2022
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து புருஷோத் நீலாம்பரி தம்பதியினர், தமிழகம் வந்து அம்பத்தூர் அடுத்த அன்னூர் பேட்டை, கச்சினாகுப்பம் பகுதியில் குடியேறினர். புருஷோத் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மூன்றாவதாக நீலாம்பரிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் புருஷோத் நேற்று முன்தினம் […]

You May Like