ஷாக் கொடுத்த அமேசான்! ஆர்டர் போட்டது டூத் ப்ரஸ்! வந்தது என்ன தெரியுமா..?

அமேசானில் எலெக்ட்ரிக் டூத் பிரஷ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, அதற்கு பதிலாக மசாலா பொடிகளை அனுப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த நவீன காலத்திற்கேற்ப, ஆன்லைன் ஷாப்பிங் மூலம் நாம் அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்கிறோம். ஆடைகள், நகைகள் முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்துப் பொருள்களையும் நம் வீடுகளுக்கு சில மணி நேரங்களிலேயே ஆன்லைன் விற்பனையாளர்கள் டெலிவரி செய்துவிடுவார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் சில சமயங்களில் தவறான பொருள்களை டெலிவரி செய்து சர்ச்சைக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், அமேசானில் பெண் ஒருவர் 12,000 மதிப்புள்ள Oral B எலக்ட்ரிக் டூத் ப்ரஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் மகள் ட்விட்டர் பக்கத்தில் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், எனது தாய் கேஷ் ஆன் டெலிவரி மூலம் டூத் பிரஷ் ஆர்டர் செய்திருந்தார். பார்சல் மிகவும் எடை குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்து, பணத்தைக் கொடுப்பதற்கு முன்பு பெட்டிகளைத் திறந்து பார்த்தோம் என்று கூறியுள்ளார். மேலும், அன்புள்ள அமேசான் ஒரு வருடத்திற்கும் மேலாக உங்களிடம் பொருட்களை வாங்கும் எங்களை ஏமாற்றும் விற்பனையாளரை நீங்கள் ஏன் நீக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பெண்ணின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

உலகின் 'வெள்ளை தங்கம்' இந்தியாவில் கண்டுபிடிப்பு...! அதை ஏற்றுமதி செய்யாமல் இப்படி பயன்படுத்தினால்...

Thu Feb 16 , 2023
உலகளவில் மிகவும் விரும்பப்படும் கனிமங்களில் ஒன்றான லித்தியம், வெள்ளை தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. உலக எரிசக்தி சந்தையில் அதன் பயன்பாடு மற்றும் தேவை காரணமாக லித்தியம் தங்கத்தின் அந்தஸ்தைப் பெற்றுள்ளது பேட்டரிகள், மின்சார வாகனங்கள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளில் லித்தியம் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. அப்படிபட்ட லித்தியம், பிப்ரவரி 9 அன்று, ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன்கள் லித்தியம் கனிமத்தை இந்திய […]

You May Like