நெற்பயிரை நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும்…

சம்பா போன்ற பருவக்காலத்தில் பயிரிடப்படும் நெற்பயிர்களுக்கு வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்களின் உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி இயற்கை சீற்றங்களின்போது பயிர் பாதிப்பு ஏற்பட்டால் தமிழக வேளாண் மக்கள் பாதுகாக்க தமிழக முதல்வர் தலைமையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிற்காப்பீட்டிற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளின் நிதி சுமையை குறைக்கும் வகையில் தமிழக முதல்வர் 2022-23ம் ஆண்டில் பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை எதிர்வரும் நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

தஞ்சை, நாகை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு நவ. 15ஆம் தேதியும், குமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கு காப்பீடு செய்ய டிச.15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணி வரை காப்பீடுக்கான பிரீமியம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம்போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த மாவட்ட விவசாயிகள் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

எவ்வாறு பயிர் காப்பீடு செய்வது?- http://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில்’’விவசாயிகள் கார்னர் என்ற பக்கத்திற்கு சென்று நேரடியாக காப்பீடு செய்து கொள்ளலாம்.

Next Post

இலங்கையை போராடி வீழ்த்தியது இங்கிலாந்து!

Sat Nov 5 , 2022
சிட்னியில் நடைபெற்ற டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இலங்கை அணியை போராடி வீழ்த்தி இங்கிலாந்து அணிஅறையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகின்றது. அறையிறுதிக்குள் நுழையப்போவது இங்கிலாந்தா? இலங்கையா? என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் ரசிகர்கள். எனவே முக்கியமான ஒரு விளையாட்டாக கருதப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழந்து 141 […]

You May Like