ஒரு ரன்னில் வீழ்ந்த பாகிஸ்தான்! டி20 கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணிக்கு நேற்று மிகவும் பரிதாபகரமான நாள். ஏற்கனவே, இந்திய அணியிடம் பெற்ற தோல்வியின் வடு ஆறுவதற்குள், தற்போது ஜிம்பாப்வே அணியிடம் பலத்த அடி வாங்கியிருக்கிறது பாகிஸ்தான் அணி. அதுவும் 131 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியிருக்கிறது. டி20 கிரிக்கெட் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதற்கு ஒரு […]

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் சபரிமலைக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் பம்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, “சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் சாமி […]

புதுச்சேரியில் 2023ஆம் ஆண்டில் 16 நாட்கள் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் 2023ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 16 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு […]

அரசு மின்னணு சந்தை இணைய தளம் தொடங்கப்பட்டதில் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ள முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக இந்திய எஃகு ஆணையம் திகழ்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.2.7 கோடி என்ற சிறிய அளவில் கொள்முதலை தொடங்கிய இந்திய எஃகு ஆணையம் இந்த ஆண்டு கொள்முதல் மதிப்பை ரூ.10,000 கோடியாக கடந்தது. முந்தைய நிதியாண்டில் ரூ.4,614 கோடி அளவிற்கு கொள்முதல் செய்து அரசு மின்னணு சந்தை […]

வரும் 31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் உள்ள வழுதானம் வார்டில் நோய் பரவுவதை தடுக்க 20,000 பறவைகளை […]

பழம்பெரும் அசாம் நடிகர் நிபோன் கோஸ்வாமி கவுகாத்தியில் உள்ள நெம்கேர் மருத்துவமனையில் காலமானார். பழம்பெரும் நடிகரான இவர் கடந்த சில நாட்களாக இதயம் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்தார். இருப்பினும், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து, அக்டோபர் 24 அன்று அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோஸ்வாமி நெம்கேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 80 வயதான […]

மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ பெரும் புதுமை பெண்‌ திட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது. இது வரை 2,3, மற்றும்‌ 4ம்‌ ஆண்டில்‌ […]

நம் உடலில் அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு கொழுப்பு மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ். இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது. எனவே ஆற்றலை வழங்க தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மிக முக்கியமானது. நம் உடல் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகிறது. மேலும் கொழுப்பு நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்க உதவுகிறது, உறுப்புகளைப் பாதுகாக்கிறது, செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது. கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த […]

நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. தமிழகத்தின் […]