சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திருவாக்கவுண்டனூரில் பூபதி மற்றும் சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்ற 1 ஆம் தேதி அன்று எனக்கு பிடித்த வாழ்க்கை துணையுடன் நான் செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சரண்யா திடீரென மாயமாகியுள்ளார். இதனையடுத்து பூபதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரண்யா கண்ணன் என்பவருடன் சிலநாட்களாக வாழ்ந்து […]
தெலுங்கானாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வரின் சகோதரி சர்மிளா மயக்கம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக நடத்தி வருகிறார். இதற்கிடையே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் […]
ஓடும் காரில் பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியில் இருந்து போஷ்ரி பகுதிக்கு தனது 10 மாத குழந்தையுடன் செல்ல பெண் ஒருவர் வாடகை கார் புக் செய்துள்ளார். கார் அவரை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளது. அப்போது, அந்த வாடகை காரில் மேலும் சில பயணிகள் இருந்துள்ளனர். இதையடுத்து, தனது குழந்தையுடன் அந்த காரில் […]
வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் மழையில் தத்தளித்து வந்தது.இந்த நிலையில், கடந்த9ம் தேதி இரவு 2 மணி அளவில் இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.என்னதான் புயல் கரையை கடந்து விட்டாலும் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்த வண்ணம் தான் இருக்கிறது. இந்த நிலையில், சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் […]
தெலுங்கில் பிரபலமாக உலா வரும் நடிகைகளில் ஹம்சா நந்தினியும் ஒருவர். தெலுங்கு மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படமான ருத்ரமாதேவி மற்றும் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் இடத்தை பிடித்துள்ளார். இவர் கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதிலிருந்து விடுபட அறுவைச் சிகிச்சை மற்றும் 9 முறை கீமோ சிகிச்சைப் பெற்றும் வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது புற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளார். சென்ற […]
கடந்த வாரம் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு தீவிர புயலாக உருமாறியது. அதன் பிறகு புயலாக வலுவிழந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் கனமழையும், சில பகுதிகளில் அதிகன மழையும் பெய்தது. இதனைத் தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் […]
பிரதமரின் ஸ்வநிதி திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீதியோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தை 2022 மார்ச் மாதத்திற்கு அப்பாலும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, 2024 டிசம்பர் மாதம் வரை கடன் வழங்கலாம். முதலாவது கடன் ரூ.10,000 இரண்டாவது கடன் ரூ.20,000 பெற்ற நிலையில் கூடுதலாக மூன்றாவது கடன் ரூ.50,000 வரை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து […]
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பதெல்லாம் இன்றைய யூத்களுக்கு கவலையில்லை. திருமணத்திற்கு முன்பாக முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது போன்று சொர்க்கத்துக்கு அருகே ப்ரீ போட்டோஷூட் செய்ய முடியுமானால், அது தான் பேரானந்தம் என்கிற ரீதியில் காலம் போய் கொண்டிருக்கிறது. கோவில் தூண்களில் இடுப்பை அசைத்தப்படியே ஆட்டம் போடுவது, இடுப்பளவு நீரில் எவனோ சொல்லிக் கொடுக்க, மனைவி கீழே விழாமல் வளைந்தப்படியே பிடித்துக் கொள்வது என ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்களின் அலப்பறை அதிகமாகி […]
கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பாம்பு இருப்பதால்பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை விமானத்தை சுத்தம் செய்யும் […]
கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கை முறை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்… யாராவது ஒருவர் சற்று விநோதமாக ஒரு செயலை செய்தாலும் அதை மிகவும் உன்னிப்பாக மற்றவர்கள் கவனிப்பார்கள். ஆனால், அப்படி ஒரு கிராமமே வினோதமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் ஆண்களே கிடையாதாம். பெண்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து வருகின்றனர். […]