fbpx

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற பணிகளை ஆண்டாய்வு செய்ய 20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு […]

அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற மொத்தம் நான்கு பேர் போட்டியிடுவதாக புதுச்சேரி மேற்கு பிரிவு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் பரபரப்பை கிளப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், புதுச்சேரி கிழக்குப் பகுதி செயலாளரான அன்பழகன் சசிகலாவிடம் கிலோ கணக்கில் தங்கமும், கோடிக்கணக்கில் பணத்தையும் பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவளித்துவதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். மேலும் அவர் கடந்த நான்கு ஆண்டுகளில், ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து […]

தந்தையுடன் ரயிலில் பயணித்த 16 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், கொச்சி அருகே கடந்த சனிக்கிழமை இரவு 7.50 மணியளவில் எர்ணாகுளத்தில் இருந்து குருவாயூர்  வரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐந்து பேர் கொண்ட கும்பல் ரயிலுக்குள் சிறுமியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது. அந்த சமயத்தில் சிறுமியை தாக்கிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிறுமியின் […]

தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கனவே அவருக்கு செயலிழந்துவிட்ட நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, […]

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள முள்ளங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் (4)0 இவர் பிளம்பிங் காண்ட்ராக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சந்தியா (34).  இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 10 வருடங்களாக இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் குழந்தை இல்லாத கவலையில், ஜான் ஐசக் குடி போதைக்கு அடிமையாகி வேலைக்கு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். […]

கள்ளக்காதலி வீட்டுக்கு செல்வது தொடர்பாக இருவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் சதீஷ் என்கிற சக்திகுமார் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில், சதீஷ் வீட்டருகே வசிக்கும் […]

மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைப்பட துறையைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய திரைத்துறையில் மிக பிரபலமானவரும் வில்லன் நடிகருமான நடிகர் பிரகாஷ் ராஜ் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது, மக்கள் என்றும் உங்களுடன் இருப்பார்கள் […]

’கொரோனாவுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். அரசாணை 354-ஐ 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த வேண்டும், 6 ஆண்டுகள் நடத்தப்படாமல் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் சிடிஎஸ், ஸ்பெஷாலிட்டிக்கான பதவி […]

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல பெற்றோர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியான நேரத்திலும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது […]

சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. கடந்த ஓராண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய […]