fbpx

தமிழகத்தில் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகலில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. நடப்பாண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் […]

ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு 300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் கிடையாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. அங்கு தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பிரபல நடிகரும் ஆம் […]

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 […]

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர், கர்ப்பமாக இருந்தது விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கருவுற்ற சிறுமி தான் ஏழ்மையில் சுழல்பவள் என்றும், ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வசதியாக இல்லை […]

மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, […]

கேரள மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் அலீனா அபிலாஷ் (22). இவர் நியூசிலாந்து நாட்டின் காவல்துறையில் சேர்க்கப்பட்ட முதல் மலையாளி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் நியூசிலாந்து காவல் படையின் கீழ் முதல் பதவியான கான்ஸ்டபிள் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆக்லாந்து மாகாணத்தில் பதவி கிடைத்துள்ளது. அலீனாவின் சாதனையை அறிந்த பாலாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எம்.எல்.ஏ மணி, சி.கப்பன் மற்றும் எம்.பி ஜோஸ் கே.மணி உள்ளிட்டோர் அவருக்கு […]

மின் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு Link-ஐ கிளிக் செய்தபோது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.8 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (83). இவரது தொலைபேசி எண்ணிற்கு கடந்த மாதம் 7ஆம் தேதி தெரியாத ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், அவரது வீட்டிற்கான மின் கட்டணம் செலுத்தவில்லை எனவும், அதனால் வீட்டின் மின் […]

வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர், சட்டையை கழற்றிவிட்டு மேலாடை இன்றி ஒரு ஆசிரியையுடன் நெருக்கமாக தொட்டு பேசுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு தினங்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையில் ரமேஷ் (40), […]

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கலைக்கல்லூரிகளில் சேர 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இது தவிர தனியார் கலைக்கல்லூரிகளும் உள்ளன. கடந்த 22ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், முன்பு போல் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கும் நடைமுறை இப்போது கிடையாது. […]