fbpx

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று […]

கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் […]

ஈரோட்டில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திது. இதுதொடர்பாக ஏற்கனவே சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தினர். ஈரோட்டில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை […]

சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக விபின் வல்லக்கடவு பகுதியில் தங்கி அந்தக் கோயில் பூசாரியாக […]

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுமுறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் […]

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், ”வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, […]

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல அதிபர் கோட்டாபய ராஜபக்ச தயாராகி வரும் நிலையில் இலங்கையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. எனினும் தற்போது வரை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]

அதிமுகவில் தனது ஒப்புதல் இல்லாமல் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் இரு அணியினரும் சட்டரீதியான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். குறிப்பாக துணை பொதுச்செயலாளர்கள், தலைமை நிலையச் செயலாளர்கள், 11 அமைப்புச் செயலாளர்கள், எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை அறிவித்தார். இந்நிலையில், இந்த அறிவிப்புக்குப் […]

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்.. சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் ரஷ்யாவும் இந்தியாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.. இந்த சூழலில் 2022-ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ரஷ்யாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் உக்ரைன் மீதான போர் காரணமாக, இந்த […]