fbpx

1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரும் தொழிலதிபருமான ரிபுத் மன் சிங் மாலிக் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 1985 ஆம் வருடம் ஏர் இந்திய விமானம் கனிஷ்கா குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 325 பயணிகள் உயிரிழந்தனர்.. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ரிபுத் மன் சிங், வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். எனினும் […]

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக தவறிழைத்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை உறுதியளித்துள்ளது.. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முதுகலை வரலாறு மாணவர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? என்கிற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வியால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இதனிடையே, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இதுகுறித்து […]

தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.. தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கின்றனர்.. ஆனால் இது ஆகம விதிகளுக்கு எதிரானது.. எனவே ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத […]

முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கடந்த 12-ம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடர் குறித்து முக.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர், அவர் வீடு திரும்பியபோது உடற்சோர்வு இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.. மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் […]

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி […]

அதிமுக-வின் தற்போதைய பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ஆளுநர் எதைப் பேசினாலும் அது பிரச்சனை ஆகிறது என்று ராஜா சொல்கிறார். திராவிடத்தைப் பற்றி ஆளுநருக்கு எதுவும் தெரியாது. ஆளுநர் தன்னுடைய பணியை மட்டும் செய்தால் போதும். அரசியல் பேசக்கூடாது என்பது தான் மரபு. மேலும், ஆளுநர் அரசியல் பேசும் போது தான் இந்த பிரச்சனைகளும் வருகிறது. […]

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அல்லது நாளை மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இன்று முதல் 75 நாட்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக கிடைக்கும். நாடு விடுதலைபெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 75நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. அதன்படி ஜூலை 15 முதல் 75 […]

அதிமுகவில் இருந்து என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்று ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம்சக்தி சேகரை கட்சியிலிருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஓம்சக்தி சேகர் கூறுகையில், “அதிமுகவில் இருந்து என்னை நீக்க இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை. அதற்கு ஏற்ற தகுதியும் அவருக்கு இல்லை. ஜெயலலிதா வழியில் வந்தவன் நான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் […]

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.. சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை  நடைபெற இருக்கிறது. […]

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை வயது காரணமாக பிரித்து வைத்ததால், மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாசன். இவரது மகன் விஜய் (வயது 17). தாசன் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இதே ஊரில் வசித்து வருபவர் சுடலைமணி. இவரின் மகள் மேகலா (வயது 16). இருவரும் […]