இறுதி சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்…!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரிஸ்வான் – பாபர் அசாம் ஜோடி ஆடியது. முதல் ஓவரிலேயே பாபர் அசாமுக்கு 0 ரன்னில் கேட்ச் மிஸ் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 105 ரன்கள் குவித்தது.

பாபர் அசாம் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் அரை சதம் அடித்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணி இந்த போட்டியில் 3 கேட்ச் தவற விட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. கடைசி வரை போராடிய நியூசிலாந்து அணி எப்பவும் போல அரையிறுதி வரை வந்து கோப்பை வெல்ல முடியாமல் வெளியேறியது.

இதுவரை பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் 3 முறை அரையிறுதியில் மோதியுள்ளன. இந்த 3 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தான் வெற்றி கண்டுள்ளன. அதுவும் அபார வெற்றிகள் ஆகும். 1992ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போதும் பாகிஸ்தான் அணி கடைசி 3 போட்டிகளில் வெற்றி கண்டு தான் அரையிறுதிக்கு சென்றது. அப்போட்டியில் நியூசிலாந்து அணி 262 என கடின இலக்கை நிர்ணயிக்க, பாகிஸ்தான் அணி அதனை விரட்ட திணறியது. எனினும் கடைசி நேரத்தில் இன்சமாம் உல் அக் 37 பந்துகளில் 60 ரன்களை விளாசி த்ரில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்தாண்டு கோப்பையையும் வென்றிருந்தது.

2007ம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியிலும் இந்த இரு அணிகளும் மோதியது. இதிலும் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 143/8 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.நாளை 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணி மோதுகிறது. இதில் வெற்றி பெரும் அணி 13-ந் தேதி பாகிஸ்தானுடன் மோதும்.


Next Post

தமிழகத்தில் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு !!

Wed Nov 9 , 2022
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக […]

You May Like