இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழகம் எடப்பாடியை சேர்ந்த இராணுவ வீரர் மரணமடைந்துள்ளார்.

எல்லையில் இராணுவ வீரர்களின் பணி இன்றியமையாத ஒன்று. அவர்களின் உயிர் தியாகம் தான் நாம் இங்கு நிம்மதியான வாழ்க்கை வாழ காரணமாக அமைகிறது. பலரும் நம் தாய் நாட்டிற்காக எல்லையில் தொடர்ந்து உயிர் தியாகம் செய்து இந்திய எல்லையை பாதுகாத்து வருகின்றனர்.

இந்திய – சீன எல்லை விவகாரம் இன்று பேச்சுவார்த்தைக்கு தாயாராகிக்கொண்டு இருக்கிறது. ஆனால் மறுபுறம் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழகத்தின் எடப்பாடியை சேர்ந்த மதியழகன் என்ற இராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதியழகன் குடும்பத்திற்கு 20லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். தமிழக வீரரின் இந்த உயிர் தியாகத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.