பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று மதியம் முதல் தனக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும், அதன்பிறகு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் குரேஷி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இன்று மதியம் எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு எனது வீட்டிலேயே நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
எனக்கு தற்போது கோவிட் 19 பாசிட்டிவ் ஆகியுள்ளது. அல்லாவின் கருணையால், நான் வலிமையாகவும், உறுதியாக இருக்கிறேன். வீட்டில் இருந்தே எனது பணிகளை மேற்கொள்ள உள்ளேன். தயவுசெய்து உங்கள் பிராத்தனைகளில் என்னை வைத்திருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இதுவரை 2,21,86 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,551 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 1,13,623 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.