தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!

மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்..

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

 வேளாண்

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்கள் அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அதாவது, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மசோதாக்களுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் கோபடைந்த எதிர்க்கட்சிகள், இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என அமளியில் ஈடுபட்டனர். எம்.பிக்களின் கூச்சல் குழப்பம் காரணமாக அவை பரபரப்பாக காணப்பட்டது. ஒரு கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று வேளாண் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார்.

20rs3

தொடர்ந்து, வேளாண் மசோதா நிறைவேற்றக்கூடாது என்றும் அவர் கூச்சலிட்டார். இந்த அமளியில் சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. எனினும் இவை எல்லாவற்றையும் கடந்து கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

1newsnationuser1

Next Post

தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி!

Sun Sep 20 , 2020
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 45 ஆயிரத்து 668 கன அடியாக அதிகரித்துள்ளது கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதனடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரத்து […]
தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி!

You May Like