பாராசின் ஓபன் செஸ்..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பிரக்ஞானந்தா..!

பாராசின் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

செர்பியாவில், பாராசின் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. மொத்தம் ஒன்பது சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 7 வெற்றி, 2 ‘டிரா’ உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ரஷ்யாவின் அலெக்சாண்டர் பிரெட்கே, 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். கஜகஸ்தானின் அலிஷர் சுலேமெனோவ், இந்தியாவின் முத்தையா தலா 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டனர். பின்னர், ‘டை பிரேக்கர் ஸ்கோர்’ அடிப்படையில் கஜகஸ்தான் வீரர் 3வது இடத்தை வென்றார். முத்தையாவுக்கு 4வது இடம் கிடைத்தது.

பாராசின் ஓபன் செஸ்..! சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் பிரக்ஞானந்தா..!

முன்னதாக, சக இந்திய வீரர்களான ஸ்ரீஜா சேஷாத்ரி, லாசெசர் யோர்டானோவ் (பல்கேரியா), காசிபெக் நோகர்பெக் (கஜகஸ்தான்), சகநாட்டவரான கௌஸ்டாவ் சாட்டர்ஜி, அரிஸ்டன்பெக் உராசயேவ் (கஜகஸ்தான்) ஆகியோரையும் இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா வென்றார். பிரக்ஞானந்தா, சென்னையில் வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா ‘பி’ அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இது போன்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்...! பள்ளி கல்வித்துறைக்கு வேண்டுகோள்...!

Sun Jul 17 , 2022
காகித கலை பயிற்சியை கற்பிக்க வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி அளிக்க டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ வராது. பயிற்சியாளர்களால் […]

You May Like