
பரோட்டாவிற்கான ஜிஎஸ்டி அதிகரித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் #HandsOffPorotta ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தென் இந்திய மாநிலங்களில் தற்போது பரோட்டா என்று அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றாகிவிட்டது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பரோட்டா சாப்பிட ஆசைப்படாதவர்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் இந்த பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது தற்போது பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அதிலும் குறிப்பாக ரொட்டிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதே உணவு வகைகளில் ஒன்றாக பரோட்டாவிற்கு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது பரோட்டோ பரியர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவிர்க்க முடியாத உணவு. கடைகோடி கிராமங்களில் உள்ள ஓட்டல்கள் முதல் மாநகர ஸ்டார் ஓட்டல்கள் வரை பரோட்டா இல்லாத இடம் இல்லை. இந்நிலையில் இந்த பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது தான் தற்போது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதுவும், ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பரோட்டாவுக்கு மட்டும் 18% வரி ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து பரோட்டா, ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #HandsOffPorotta என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் பரோட்டா பிரியர்கள், பரோட்டாவுக்கும் தங்களுக்குமான ப்ரியத்தை புகைப்படம் பதிவிட்டும் பகிர்ந்து வருகின்றனர்.