பெற்றோர்களே உஷார்…! ஸ்மார்ட்போனால் குழந்தைகளின் மூளை பாதிக்கும் அபாயம்…!

இன்றைய காலக்கட்டத்தில் உலகமே மொபைல், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பயன்பட்டால் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கணினி, மொபைல் போன்றவைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதிலும் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொபைல் போன்களுக்கு அடிமையாவதால் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்து.

கண்களை எவ்வாறு பாதுகாப்பது? குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மொபைல்போன் கொடுக்காமல் வெளியே சென்று விளையாட பழக்க வேண்டும்.
கணினியில் தவிர்க்க முடியாமல் 8 அல்லது 10 மணி நேரம் வேலை செய்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குறைந்தது 2 நிமிடம் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க வேண்டும்.

குழந்தைகளின் மூளையை பாதிக்கும் மொபைல்: பொதுவாக பிறந்தது முதல் 5 வயது வரையிலான காலகட்டத்தில்தான், மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனிற்குள் மூழ்கும்போது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபடும்.

“ஸ்மார்ட்போன்” என்ற வட்டத்திற்குள்ளாகவே, வாழ அவர்களது மூளை பழக்கப்பட்டுவிடும். 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஸ்மார்ட்போன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 3 முதல் 5 வயது குழந்தைகள், கல்விக்காக ஒரு மணிநேரம் மட்டும் பயன்படுத்தலாம். அதுவும், வீடியோக்களை அவர்கள் பார்க்க அனுமதிக்கக்கூடாது. மாறாக ரைம்ஸ் பாடல்களை கேட்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். 5 முதல் 17 வயது குழந்தைகளுக்கு 2 மணி நேரம் மட்டும், அதுவும் கல்விக்கு உதவும் வகையிலான விஷயங்களை தெரிந்து கொள்ள அனுமதிக்கலாம். இதுதான், கட்டுப்பாடானஸ்கிரீனிங் நேரம். கட்டுப்பாடுகள் மீறப்படும்போது, குழந்தைகள் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

Maha

Next Post

20 ஆண்டுகளுக்குப் பின் ரீ-ரிலீஸாகும் கில்லி!!

Wed Apr 3 , 2024
தரணி இயக்கத்தில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ஏப்ரல் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ’ஒக்கடு’ படத்தின் ரீமேக் ஆக கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக மாறியது. விஜய்யின் ஆக்‌ஷன், த்ரிஷாவின் க்யூட்னஸ், தரணியின் மேக்கிங், வித்யாசாகரின் சாங்ஸ், பிஜிஎம் என […]

You May Like