இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

காதலை எதிர்த்த பெற்றோர்… காதலனுக்காக தந்தையை கொன்ற மகள்…

கேரளாவில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தந்தையை அவரது மகளே காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

father murder

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள இலவம்திட்டா பகுதியை சேர்ந்தவர் சஜீவ். வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், ஒரே மகள் என்பதால் அவர் மீது சஜீவ் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார். மகளை அரவணைத்தும் செல்லமாகவும் வளர்த்து வந்துள்ளார். சஜீவ் வெளிநாட்டில் வேலை செய்வதால் மனைவியும் மகளும் தனியாக வசித்து வந்தனர்.

murderlogo

இந்நிலையில் அவரது மகள் கல்லூரிக்கு பஸ்சில் சென்றபோது கோட்டயம் பள்ளிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவருடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. வீட்டிற்கு தெரியாமல் பல நாட்களாக காதலனுடன் பழகிவந்துள்ளார்.

நாளடைவில் இவர்களின் காதல் விவகாரம் அவரது அம்மாவுக்கு தெரியவர, மகளை கண்டித்துள்ளார். ஆனால், அவர் காதலை கைவிடாமல் காதலனுடன் சுற்றி வந்துள்ளார். இதனால் அவர் வெளிநாட்டில் உள்ள தனது கணவர் சஜீவிடம் மகளின் காதலை பற்றி சொல்லி அழுதுள்ளார்.

இதனால் வெளிநாட்டில் இருந்து வந்த சஜீவ், மகளிடம் காதலை கைவிடும் படி கெஞ்சியுள்ளார். ஆனால் காதலை விட மறுத்துவிட்டாள். காதலை பிரித்துவிடுவார்களோ என எண்ணி, தந்தையின் பாசத்தைவிட காதலனே முக்கியம் என்று வீட்டில் இருந்த நகையை எடுத்துக் கொண்டு காதலனுடன் ஓடிவிட்டார்.

bangalore murder

பாசமாக வளர்த்த மகள் வீட்டைவிட்டு வெளியேறியதால், சஜீவ் மகளின் காதலை பற்றி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி அவரது மகளையும், காதலனையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, சஜீவும் வரவழைக்கப்பட்டார்.

காவல்நிலையத்தில், அவர் மகளை தன்னுடன் வரும்படி கூறி பாசப்போராட்டம் நடத்தினார். ஆனால் தான் கல்யாணம் செய்து கொண்டதாகவும், தாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் அந்த பெண் கூறியதால், வேறு வழியின்றி அவர்களை போலீசார் விடுவித்தனர்.

மகளை காதலில் வீழ்த்தி தன்னிடம் இருந்து பிரித்துச் சென்ற மகளின் காதலன் மீது கடும் கோபத்தில் இருந்த சஜீவ் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகளின் காதலன், சஜீவின் மகள், அவரது காதலன் மற்றும் நண்பர் ஒருவர் ஆகிய 3 பேரும் சஜீவின் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சஜீவை 3 பேர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அடித்ததில், ரத்த வெள்ளத்தில் சஜீவ் துடித்துக்கொண்டே கீழே சாய்ந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

சஜீவின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் சஜீவை காப்பாற்றி பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சஜீவ் உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர், சஜீவின் மகள், காதலன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தந்தையை அவரது மகளே காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனாவுக்கு நீரிழிவு நோய் மருந்து சிறந்த பலன் தரும்..!

Fri Mar 27 , 2020
கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை விட, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும், மருந்துகளை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு நாடுகளும் தீவீரமாக ஈடுபட்டுள்ளன. மருந்து கண்டுபிடித்துவிட்டதாக, ஒரு சில நாடுகள் கூறி வந்தாலும், எதுவும் உறுதி செய்யப்படாத முதற்கட்ட தகவலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் […]
1 medicines 1581909089 1

You May Like