டெல்லி தம்பதியினர் தங்கள் மகளை உளவு பார்க்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.. தனியார் துப்பறியும் பணியாளரான தன்யா பூரி இதுகுறித்து பேசி உள்ளார். இதுதொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது..
என்ன நடந்தது?
ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பேசிய தன்யா பூரி “டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பதாக அவரின் பெற்றோருக்கு அடிக்கடி சந்தேகம் இருந்தது, ஆனால் அப்பெண் அதைச் சொல்லவில்லை. எனவே, அவர்கள் எங்களை வேலைக்கு அமர்த்தினர். நீங்கள் எங்கள் மகளை பின்தொடர்ந்து சென்று அவளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்குங்கள் என்று எங்களிடம் தெரிவித்தனர்… இருப்பினும், ஒரு நாள், அந்தப் பெண் விபச்சார விடுதிகள் மற்றும் விபச்சாரிகள் நிறைந்த ஒரு பகுதிக்கு அப்பெண் சென்றார்.. அந்தப் பெண் விலையுயர்ந்த ஆடைகளை வாங்கவும், தனது நண்பர்களுடன் வெளியே செல்லவும் கூடுதல் பணம் பெறுவதற்காக விபச்சாரத்தை தேர்ந்தெடுத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்..” என்று தெரிவித்தார்…
சமூக ஊடகங்களில் விவாதம்
இந்த வீடியோ ஆன்லைனில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது, பல பயனர்கள் பெற்றோரின் முன்னுரிமைகள் மற்றும் அணுகுமுறையை விமர்சித்தனர். மேலும் சிலர், 14 வயதுடையவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்த ஆன்மீக பேச்சாளரின் கூற்றை முன்வைத்து, அது இப்போது அர்த்தமுள்ளதாக தெரிகிறது என்று பதிவிட்டனர்…
ஒரு நபர், திருமணமாகாத பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்ற அனிருத்தாச்சார்யாவின் கூற்றை மேற்கொள்காட்டி, “அனிருத்தாச்சார்யா சொன்னது சரி” என்று பதிவிட்டுள்ளார். எனினும் அந்த பயனரின் கருத்தை பலரும் விமர்சித்தனர்..
எனினும் பலர் ஒரு துப்பறியும் நபரை நியமித்ததற்காக பெற்றோரை கடுமையாக விமர்சித்தனர். “பெற்றோர்கள் உளவு பார்க்க முடியும், ஆனால் அவர்களின் மகளுக்கு உதவ அவர்களிடம் பணம் இல்லையா? வாவ்,” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்..
குடும்பத்தின் நிதி நிலைமை குறித்து இன்னும் சிலர் ஆர்வமாக இருந்தனர். “சற்று சந்தேகமாக இருக்கிறது…. மிகவும் பாரம்பரியமிக்க குடும்பம் என்பதால் அந்த காதலிக்க முடியாது.. ஷாப்பிங் சென்று ஆடம்பரமாக வாழவும் போதுமான செலவுகளை கொடுக்க முடியாது, ஆனால் ஒரு தனியார் புலனாய்வாளர் தங்கள் மகளை உளவு பார்க்க முடியும்.” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்..
“இது தனியுரிமையின் மீதான படையெடுப்பு அல்லவா? அவர்களின் அனுமதியின்றி ஒருவரைப் பின்தொடர்வது,” என்று மற்றொருவர் கூறினார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உளவு பார்க்க துப்பறியும் நபர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் வெளிப்படையாக பேச வேண்டும் என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..