
வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவையினை ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்நோயினால் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மக்கள் அதிகம் பொது வெளிக்கு வருவதை தடுக்கும் விதமாக, மின்சார ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளதை போல் எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில் சேவை வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.