Passport | பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை தேடினால் சிக்கல்..!! எச்சரிக்கும் மத்திய அரசு..!! இதுதான் ஒரிஜினல்..!!

நீங்கள் பாஸ்போர்ட் பெற விரும்பினால், மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை தேடுபவர்கள் போலி இணையதளங்கள் அல்லது மொபைல் செயலிகளுக்கு இரையாக வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல போலி இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தரவுகளை சேகரித்து பெரும் கட்டணம் வசூலிப்பது தெரியவந்துள்ளதால், அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலி இணையதளங்களின் பெயர்கள்

www.indiapassport.org
www.online-passportindia.com
www.passportindiaportal.in
www.passport-india.in
www.passport-seva.in
www.applypassport.org

எனவே, இந்திய பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் மோசடியான இணையதளங்களைப் பார்வையிடவோ அல்லது பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பாக பணம் செலுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஸ்போர்ட் சேவைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் www.passportindia.gov.in ஆகும்.

Chella

Next Post

இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த நகரம் இதுதான்!… முதல் 5 இடங்களில் இடம்பிடித்த சென்னை!

Sat Aug 19 , 2023
இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் விலை உயர்ந்த நகரமாக மும்பையும், மிகவும் மலிவு விலை நகரமாக அகமதாபாத் இடம்பிடித்துள்ளன. நகரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் குடிமக்களின் நல்வாழ்வுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதால், வீட்டுவசதிக்கான மலிவு பிரச்சினை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தநிலையில், 2023ம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மலிவு விலை நகரங்களின் பட்டியலை முன்னணி ப்ராபர்ட்டி ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா வெளியிட்டுள்ளது. நைட் ஃபிராங்க் வெளியிட்ட மலிவான […]

You May Like