ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

ஐபிஎல் 2020-க்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற பரிசிலீத்து வருவதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி

கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி, வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே லடாக் மோதலை தொடர்ந்து, சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எதிர்ப்புகள் வலுத்து வந்தது. எனினும் சீன நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக நீடிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்தற்கு சமூக வலைலதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து ஐபிஎல் 2020 போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சராக விவோ இருக்காது என்று அண்மையில் பிசிசிஐ அறிவித்தது.

bcci 99

இந்நிலையில் இந்த ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்க்கான ஏலத்தை யோகா குரு, பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திஜாராவாலா இதுகுறித்து பேசிய போது “ ஐபிஎல் 2020 போட்டிகளை ஸ்பான்சர் செய்வது தொடர்பாக நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இது உண்மையில் ஒரு நல்ல வாய்ப்பு. இந்திய நிறுவனத்தை உலகளவில் கொண்டு செல்லும் தளமாக இது அமையும். இந்த கண்ணோட்டங்களில் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், பதஞ்சலி நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 10,500 கோடி வரை வர்த்தகம் செய்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனம் ரூ. 8,329 கோடி வருவாய் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்... திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை...

Mon Aug 10 , 2020
திருமணம் நடந்த அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியைக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்குமார். இவர் செம்பாக்குறிச்சியைச் சேர்ந்த கவிதா என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். நட்பில் தொடங்கி நாளாடைவில் காதலாய் மாறியது. இருவரும் வேறு இனத்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். […]
marriage

You May Like