‘பொருளாதரத்தை மீட்க அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கல்’ – பாகிஸ்தான் பிரதமர் முடிவால் மக்கள் அதிர்ச்சி..!!

மிகவும் மோசமான நிதி பிரச்சனைகளை எதிர்கொள்டுள்ள பாகிஸ்தான் அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் தனியார்மயமாக்கல் முக்கியமானது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு அரசு முதலீட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

பாகிஸ்தான் அரசின் முன்பு நஷ்டமடைந்து வரும் அரசு நிறுவனங்களை மட்டும் தனியார்மயமாக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் தனியார்த் துறைக்கு விற்பனை செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த திடீர் முடிவுக்கு முக்கியமான காரணம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெறும் கடன் பேச்சுவார்த்தைகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் தனது கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்க, IMF இடம் இருந்து கடன் பெறுவது மட்டும் தான் ஒரே வழியாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்குத் தனது நட்பு நாடுகள் கடன் உதவி அளிப்பதை படிப்படியாகக் குறைத்து வரும் வேளையில் IMF சொல்வதை அப்படியே கேட்கவேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. IMF பொதுவாக, கடன் வழங்குவதற்கு முன்பு, கடன் பெறும் நாடுகளிடம் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது.

அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மூலம் அரசின் செலவுகளைக் குறைப்பதற்கும், பொருளாதாரத்தை தாராளமயமாக்கவும் உதவும் என பாகிஸ்தான் தீவிரமாக நம்பும் காரணத்தால் அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார்மயமாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் கடன்களுக்காக மட்டும் மாதம் 11.5 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. PIA தனியார்மயமாக்கல் செயல்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இந்த செயல்முறை முழுவதும் அதாவது ஏலம் விடுதல் உள்ளிட்ட முக்கிய படிகள் அரசு தொலைக்காட்சி வழியாக நேரலை செய்யப்படும் என்றும் பிரதமர் ஷெரிஃப் உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசின் இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக உள்ளது. தனியார்த் துறை நிறுவனங்கள் திறமையாகச் செயல்பட்டு லாபம் ஈட்டக்கூடும் என்றும், இதன் மூலம் அரசின் நிதிச் சுமையைக் குறைக்க முடியும் எனப் பாகிஸ்தான் இறுதி முடிவை எடுத்துள்ளது.

Read More ; “ஏன் இப்படிலாம் தரக்குறைவா பேசுறீங்க? தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளியுங்கள்” : ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!

Next Post

அதிர்ச்சி..!!! 8 மாவட்டங்களில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Wed May 15 , 2024
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமாக மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் […]

You May Like