சிகப்பு கயிறு கட்டுவதன் மூலம் அதிர்ஷ்டம் கொட்ட போகும் ராசிக்காரர்கள்..! யாரெல்லாம் கட்டக் கூடாது….!

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம்.

இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து மனத்திற்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சிவப்பு கயிறு கட்டுவது தெய்வங்களின் ஆசீர்வாதத்தைத் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், ஜோதிட சாஸ்திரதட்தின் அடிப்படையில் சிலருக்கு, சிவப்பு கயிறு கட்டுவது ஆபத்தான விளைவுகளைக் கொடுக்கும். ஆகவே எந்த ராசிக்காரர்கள் சிகப்பு நிற கயிறை அணியக்கூடாது என்று தெரிந்துக்கொள்வோம்.

சனிபகவானால் சில ராசிக்காரர்களுக்கு சிவப்பு கயிறு கட்டுவது நல்ல பலன்களை கொடுக்காது.கும்பம், மீனம் ஆகிய ராசியினர் ஒருபோதும் சிவப்பு கயிறைக் கட்டக் கூடாது.இது எதிர்பாராத பாதக விளைவுகளை கொடுக்கும்.இவர்கள் மஞ்சள்,கருப்புஅல்லது இளஞ்சிவப்பு நிற கயிறுகளை அணியலாம்.

மேலும் மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசியினர் சிவப்பு நிற கயிறு கட்டினால் அதிர்ஷடம் கிடைக்கும் இவர்களுக்கு சிவப்பு கயிறு பெரும்பாலும் நல்ல பலன்களையே கொடுக்கும்.

1newsnationuser1

Next Post

காலை 9 முதல், மறுநாள் காலை 9 மணி வரை...! " உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டம்...! தமிழக அரசு அதிரடி...!

Wed Jan 31 , 2024
உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்தி, முத்திரை பதிக்கும் வகையில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர்,இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களைத் தேடி […]

You May Like