இந்த 2 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க.. மிக அதிக கனமழை பெய்யுமாம்..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, இண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 15,16, 17 ஆகிய தேதிகளில் புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று, கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. தமிழக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல்‌, மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. நாளை, கர்நாடகா கடலோரப்பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

வரும் 15, 16 ஆகிய தேதிகளில் கர்நாடகா கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. வரும் 17-ம் தேதி, மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஒன்றாக சரக்கடித்த நன்பர்கள்; வாக்குவாதத்தால் நேர்ந்த கொடூர சம்பவம்...!

Wed Jul 13 , 2022
சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நாகல்கேணி மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். பாண்டியனும் அதே மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் சிரஞ்சீவி என்பவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று, சிரஞ்சீவியின் மனைவி பவானியை கெட்ட […]

You May Like