கொரோனாவால் பாதிக்கப்படவர்கள் மன தைரியத்துடன் முறையான சிகிச்சை மூலம் குனமாவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை. மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் பரவும் வேகம் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பால் மரணம் தான் முடிவு என்ற எண்ணங்களை மக்கள் மாற்றி கொள்ள வேண்டும். முறையான சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உலக அளவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஐசிஎம்ஆர் அனுமதியோடு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதானால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்க்பட்டோரில் அவர்களின் நோயின் வீரியத்திற்கு ஏற்பவும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் என தனித்தனியாக 11 வகையான சிகிச்சை முறை கையாளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்களுக்கு அலோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி போன்ற எல்லா விதமான சிகிச்சைகளையும் அளிப்பதாகவும், சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பரவலை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்திவருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.