“வாக்களிக்கும் முன் மக்கள் தங்கள் வாழ்க்கை நிலையை பற்றி சிந்திக்க வேண்டும்.. ராமர் கோயிலை பற்றி அல்ல.”! சசி தரூர் பரபரப்பு பேச்சு.!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், பாஜகவின் ஆட்சியில் ஏழைகள் மிகவும் ஏழ்மை அடைந்து வருகிறார்கள். வாக்களிக்கும் முன் தங்கள் வாழ்க்கை நிலையை பற்றியும் மக்கள் யோசிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டியதைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. மத்திய அரசை ஏற்காதவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை பாஜகவின் மீது அடுக்கினார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இலக்கிய விழாவில் பேசிய, காங்கிரசைச் சேர்ந்த, கேரளாவின் திருவனந்தபுரம் மத்திய அமைச்சர் சசி தரூர் பாஜகவை பற்றிய பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது பாஜகவிற்கு குறுகிய காலம் தான் பலன் அளிக்கும். வரப்போகும் லோக்சபா தேர்தலில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ராமர் கோயிலைப் பற்றி சிந்திக்காமல் மக்கள் தனது வாழ்க்கை நிலையை பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும்”, என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர், “மக்கள் தங்களுடைய பொருளாதார நிலையை வலியுறுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் கீழ் அது சிறப்பாக உள்ளதா முன்பு இருந்ததைப் போல் தங்களால் சாப்பிட முடிகிறதா? அடிப்படைப் பொருட்களின் விலை ஏற்றத்தை கவனியுங்கள். அவர்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பாஜகவை பற்றி கூறுகையில், “பிரமிட்டின் அடிப்பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த அரசாங்கம் மிகக்குறைவாகவே செய்திருக்கிறது. மேலும் ஏழைகள் இன்னும் ஏழ்மை அடைகிறார்கள். காங்கிரஸ் கட்சி ஒரு சுதந்திரமான பொருளாதாரத்தை நோக்கி முயற்சிகள் செய்து வருகிறது. அதில் நிதி ரீதியாக பலவீனமானவர்களும் பங்கேற்பதை காண விரும்புகிறது. இதனால் அவர்களும் வாழ்வில் வெற்றி பெற முடியும். எதிர்கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். நாட்டிலுள்ள அமலாக்க இயக்குனரகம் போன்றவற்றை இந்த ஆட்சி தவறாக பயன்படுத்துகிறது”, என்று கூறி குற்றம் சாட்டினார்.

மேலும் அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசத்திற்கு சேவை செய்ய கலாச்சாரங்களைக் கடந்தும் ஒற்றுமை நிலவியது. ஆனால் இப்போது அப்படி இல்லை. மத்திய அரசை ஏற்காதவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நாடு, ‘தேர்தல் சர்வாதிகாரமாக’ மாறி வருகிறது”, என்றார்.

“ராமர் கோவில் திறப்பு விழா அன்று, நாங்கள் கோவிலுக்கு செல்லவில்லை என்பதால், நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. நான் விரும்பும் போது ராமர் கோயிலுக்கு செல்வேன். ராமர் மீது பாஜகவுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். நமது நேரத்தையும், வசதியையும், வழிபாட்டையும் தேர்ந்தெடுப்பதால், நாம் இந்துக்களுக்கு விரோதிகள் என்று ஆகாது”, என்றும் கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.

Next Post

பிரிட்டன் மன்னர் 3ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு..!! பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

Tue Feb 6 , 2024
இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022ஆம் ஆண்டில் உயிரிழந்ததை அடுத்து மன்னராக மகன் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றார். அண்மையில் அவருக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புரோஸ்டேட் சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அதற்கான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. […]

You May Like