சக காவல் துறை அதிகாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் காவலர்…..! அதிரடியாக பணி நீக்கம் செய்த காவல்துறை….!

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரகாந்தி. இவர் தன்னுடைய காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார் ஆகவே ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பிறகு துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு அப்போதைய ஏடி.எஸ்.பி லாவன்யா நியமனம் செய்யப்பட்டார். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண் காவலர் செல்போன் உரையாடல் குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தார். ஆகவே வீரகாந்தி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணை அறிக்கை விசாகா கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து விசாகா கமிட்டி நடத்திய ஆய்வின் முடிவில் ஆய்வாளர் வீரகாந்தி மீதான புகார் உண்மை என்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே அவரை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று விசாகா கமிட்டி பரிந்துரை செய்தது.

இந்த சூழ்நிலையில், வீரகாந்தியை பணி நீக்கம் செய்து திண்டுக்கல் டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் விசாகா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைக்கு உள்ளான முதல் காவல் ஆய்வாளர் வீரகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

மூதாட்டி படுகொலை நகை பணம் கொள்ளை….! நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பு….!

Sat Feb 11 , 2023
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள பிலிப்பாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாவாயி( 63) இவருடைய கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வீட்டில் தனியாக வாழ்ந்திருக்கிறார் இவருடைய மகன் மணி என்கின்ற கனகராஜ் (39) இன்றைய மகன் அபுதாவியில் வேலை பார்த்து வருகின்றார். தற்சமயம் அந்த மூதாட்டியின் வீட்டில் எலக்ட்ரீசியன் பணி நடந்து வருகின்ற நிலையில், அதற்காக வீட்டில் சுற்றுச்சூழல் துளையிடப்பட்டு பணிகள் நடந்து […]

You May Like