சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

செல்ல நாய்களும், பூனைகளும் அன்பையே பரப்புகின்றனர் கொரோனாவை அல்ல… மேனகா காந்தியும்-பிராணிகள் நல ஆர்வலர்களும் கருத்து…

மிருகங்கள் மூலம் கொரோனா பரவவில்லை என அறிவுறுத்தியும், தாக்குதலுக்கு ஆளாவதால், செல்ல நாய்களும், பூனைகளும் கொரோனா வைரசை பரப்புவதில்லை, அவை அன்பைத்தான் பரப்புகின்றன என்று முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியும், பிராணிகள் நல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

dog cat

பொதுவாக வீட்டில் நாய்களும், பூனைகளும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவது வழக்கமான ஒன்றுதான், ஆனால் இந்த நாய்களும், பூனைகளும் கொரோனா வைரசை பரப்புவதாக தவறான தகவல்கள் பரவி வருவதால் இந்தியாவில் பல இடங்களில் பூனைகளும், நாய்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இதனால் பிராணிகள் நல ஆர்வலர்களை மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து, முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி கூறுகையில், பூனைகள் கொரோனா வைரசை பெறுவதும் இல்லை. கொடுப்பதுவும் இல்லை. ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக வெளியான முட்டாள்தனமான தகவலை டி.வி.யில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பூனைகள், புலிகள் அல்ல. அவற்றுக்கு இடையே உறவு இல்லை. அப்படி உறவு இருப்பதாக கருதினால், அது நாய்களை ஓநாய்களுடன் ஒப்பிடுவதற்கு சமம்.

உங்கள் பூனைகள் சுற்றிலும் இருப்பது முற்றிலும் பாதுகாப்பானது. அவற்றுக்கு மக்கள் உணவு கொடுக்க அனுமதியுங்கள். ஒவ்வொரு காலனியிலும் பூனைகளை அனுமதியுங்கள். அவை மிகப்பெரிய சொத்து என வருத்தம் தெரிவித்தார்.

இதுகுறித்து மல்யுத்த வீரர் சங்கிராம் சிங் கூறுகையில்,பூனைகளும், நாய்களும் கொரோனா வைரசை பரப்புகின்றன என்பது சரியானது அல்ல. இது தவறான தகவல். செல்லப் பிராணிகள் ஒன்றை மட்டுமே பரப்புகின்றன. அந்த ஒன்று, அன்பு. எனவே உங்கள் செல்லப்பிராணிகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். தெரு விலங்குகள் கவனிக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள் என கூறினார்.

பத்ராஸ் பாசிட்டிவ் ஹெல்த் கிளினிக் முகேஷ் பத்ரா கூறுகையில்,இப்போது பரவுகிற புதிய வைரஸ், செல்லப்பிராணிகளிடம் இருந்து பரவவில்லை. உண்மையில் அவற்றிடம் இருந்து நீங்கள் அன்பைத்தான் பெறுகிறீர்கள். இந்த தருணங்களில் அந்த அன்புதான் உங்கள் வாழ்க்கையை தொடர வைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

1newsnationuser2

Next Post

ஊரடங்கை தளர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.... வீடியோ கான்பரன்சில் பிரதமருக்கு சரத்பவார் யோசனை...

Thu Apr 9 , 2020
நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் நடந்த வீடியோ கான்பரன்சில் பிரதமர் மோடிக்கு சரத்பவார் யோசனை தெரிவித்தார். நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் […]
Sarath Pawar's idea for Prime Minister in video conferencing ...

You May Like