இன்றைய நிலவரப்படி (13.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.99 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.64 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 40 டாலருக்கு கீழ் சரிந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமை நுகர்வோர் தலையில் தற்போது கட்டப்படுகிறது.
இன்று தலைநகர் சென்னையில் நேற்றைய விற்பனை விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.47 லிருந்து 52 காசுகள் உயர்ந்து ரூ.78.99 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.71.14 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.71.64 காசுகளுக்கும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு பாமர மக்களுக்கு மற்றொரு ஊரடங்காக அமைகிறது.