தொடர்ந்து பத்து நாளுக்கும் மேலாக படிபடியாக விலை ஏற்றத்தை அதிகரித்துள்ளது எண்ணை நிறுவனங்கள். இன்றைய நிலவரப்படி (19.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.82 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.77 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நகரங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பிற மாவட்ட மக்களையும் வெளியே செல்ல விடாமல் தடுக்கிறது. எண்ணை நிறுவனங்களுக்கு இது லாபகரமான நேரமாக இருந்தாலும் சாமானிய மக்கள் தலையில் இந்த சுமையை ஏற்றுவது கவலையளிக்கிறது.
இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.32 லிருந்து 50 காசுகள் உயர்ந்து ரூ.81.82 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.23 லிருந்து 54 காசுகள் உயர்ந்து ரூ.74.77 காசுகளுக்கும் விற்பனையாகிறது.