இன்றைய நிலவரப்படி (01.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம் மிக பெரும் விலையேற்றம் அடைந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் மையம் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்த போதிலும் இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறியது. இதற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு குறைந்ததே காரணமாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் ஊரடங்கால் ஏற்ப்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய அத்தியாவசிய பொருட்களை விலை குறைவாக விற்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் உற்பத்தி விலையை அதிகரிக்கும் இந்த பெட்ரோல், டீசல் வணிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இன்றும் சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து மாறாமல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனையாகிறது.