இடைவிடமால் தொடர்ந்து உயருகிறது பெட்ரோல், டீசல் விலை. இன்றைய நிலவரப்படி (18.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.81.32 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.74.23 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

என்ன தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை பாதிக்கிறது என்று கதறினாலும் எண்ணை நிறுவனங்கள் சற்றும் சலிக்காமல் நாளுக்கு நாள் விலையை உயர்த்தி கொண்டே தான் செல்கிறது. கடந்த மாதம் எந்த ஒரு விலையேற்றம் இல்லாத சூழலில் எப்படியாவது பொருளாதாரத்தை மீட்டு விடும்வோம் என்று நம்பி இறங்கிய தொழிலாளர்களுக்கு இந்த விலையேற்றம் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எண்ணெய் நிறுவனத்திடம் என்று போனதோ அன்று ஆரம்பித்தது தொடர் விலையேற்றம். சென்ற மாதம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. இந்த வரிசுமையை எண்ணை நிறுவனங்கள் நுகர்வோர் மீது சுமத்துவது வருத்தம் அளிகிறது.
இன்று சென்னையில் நேற்றைய விற்பனை விலையிலிருந்து பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.86 லிருந்து 46 காசுகள் உயர்ந்து ரூ.81.32 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.73.69 லிருந்து 54 காசுகள் உயர்ந்து ரூ.74.23 காசுகளுக்கும் விற்பனையாகிறது.