தன் காதலியின் மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய முதியவர் – காவல்துறை நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில்  கள்ளக்காதலியை பார்க்க வருவதாக கூறி  அவரது மகளை கர்ப்பம் ஆக்கிய நபரை  காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் 60 வயது பெண்மணி. இவருக்கு 40 வயதில்  மாற்றுத்திறனாளி  மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த 60 வயது பெண்மணிக்கும் சிவதாபுரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கும்  இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் சுப்பிரமணி  அடிக்கடி இந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில்  இந்த மூதாட்டியின் 40 வயது மாற்றுத்திறனாளி மகள் திடீரென உடல் நலக்குறைவால்  பாதிக்கப்படவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து இருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாக மூதாட்டியிடம் கூறி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அந்த பெண்மணியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அந்தப் பெண்மணி  நம் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சுப்பிரமணி தான் இதற்கு காரணம் எனக் கூறியிருக்கிறார். தாயைப் பார்க்க வந்த போது  அவரது மகளிடமும் பேசி பழகி மாற்றுத்திறனாளி பெண்ணை  பாலியல்  பலாத்காரம் செய்து சுப்பிரமணி கர்ப்பமாக இருப்பது மூதாட்டிக்கி தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து  சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுப்பிரமணிக்கு எதிராக புகாரளித்தார் மூதாட்டி இந்தப் புகாரின் பேரில் காவல்துறை சுப்பிரமணியை கைது செய்துள்ளது. தாயிடம் உறவில் இருந்து கொண்டே அவரது மாற்றுத்திறனாளிகளை மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் சுப்பிரமணியின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மூதாட்டியிடம் உறுதி அளித்துள்ளனர். சுப்பிரமணியால் இன்று மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார் 40 வயதான மாற்றுத்திறனாளி பெண். இவரை கர்ப்பம் ஆக்கிய சுப்பிரமணி என்ற சடையனுக்கு வயது 63 என்பது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

#BREAKING: 3வது முறையாக துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..! இதுவரை 1900 பேர் பலி...

Mon Feb 6 , 2023
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. ஒரு நிமிடம் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி, வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. 10 மாகாணங்களில் ஏற்பட்ட இந்த அதிதீவிர நிலநடுக்கத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் பலி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. […]

You May Like