
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் திருவனந்தபுரத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி இன்று எளிய முறையில் நடைபெற்றது.
முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாசும் திருவனந்தபுரத்தில் உள்ள பினராய் விஜயனின் இல்லத்தில் திருமணம் எளிமையாக நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி நடைபெற்ற திருமண விழாவில், இரு வீட்டார்கள் உடன் தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 30க்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.