அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

நண்பனின் செயினை திருட திட்டமிட்டு கொலை…அடுத்தடுத்து இரண்டு கொலைகள்…அதிர்ச்சி வாக்குமூலம்…

மது அருந்தும்போது பழக்கம் ஏற்பட்ட நண்பனின் கழுத்தில் இருந்த செயினை திட்டமிட்டு திருடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

two murders

கடந்த 7ம் தேதி லிட்டில் ஜான் (எ) ஹென்றி (38) சித்தாலப்பாக்கம் ஏரியில் மர்மமான முறையில் சடலமாக இருந்தார். விசாரித்ததில் மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த லிப்ட் ஆபரேட்டர் என்பது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் கழுத்தில் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர் ஹென்றி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதன்படி, பள்ளிக்கரணை போலீசார் ஏரி அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று ஆட்டோ ஒன்று அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மேடவாக்கம், ராமைய்யா நகர், நேரு தெருவை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் சேவியர் அருள் (45) என்பவருக்கு சொந்தமான ஆட்டோ என்வது தெரியவந்தது.

murderlogo

அவரை பிடித்து விசாரித்ததில், மது அருந்தும்போது, எனக்கும்
ஹென்றிக்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும், அவர் கழுத்தில் இருந்த செயினை திருட வேண்டும் என்று நினைத்து, அவரை சித்தாலப்பாக்கம் ஏரிக்கு அழைத்து சென்று, என் மகன் மைக்கேல் விஜய் (19), எனது நண்பர் அமல்ராஜ் (32) ஆகியோருடன் சேர்ந்து,
ஹென்றிக்கு மது அதிகமாக கொடுத்து போதை ஏறியதும், அவரது செயினை பறித்துவிட்டு, ஏரியில் தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்தோம் என கூறினார்.

மேலும் விசாரித்ததில், எனது மகனை காதலிப்பதாகவும், இதனால் கர்ப்பமடைந்ததாக கூறி மேடவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சபானா (23) என்ற பெண் திருமணம் செய்து வைக்க வேண்டும், என தொடர்ந்து தொல்லை செய்தார்.

அப்பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க எனக்கு விருப்பமில்லை அதனால், எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி, கைகளைக் கட்டி ஏரியில் வீசி கொன்றதாக தெரிவித்தார். இவர் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது மகன் மைக்கேல் விஜய் மற்றும் அவரது நண்பர் அமல்ராஜ் ஆகிய 3 பேரையும் கடந்த 9ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சந்தேகம் தீராத போலீசார், அடித்தடுத்து இரண்டு கொலைகளை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் சுற்றியதால், சந்தேகத்தில் வேறு எதும் கொலைகளில் சம்பந்தபட்டிருக்கலாம் என்று அவரை நீதிமன்ற காவலில் விசாரிக்க போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு செய்ததின் அடிப்படையில், 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கியது. மேலும் விசாரணையை தொடங்கிய போலீசார், அப்போது மற்றுமொரு கொலை பற்றி கூறினார்.

அதாவது, திருப்பூரில் உள்ள தனது அக்கா சகாயமேரி (50), கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும், இவரது மகள் சையதலி பாத்திமா (28) என்பவரும் கணவனை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருவதாகவும் கூறினார். மேலும், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம், அக்கா சகாயமேரிக்கு பலருடன் கள்ளக்காதல் இருப்பது மகள் சையதலி பாத்திமாவுக்கு தெரியவந்தது.

இதனால் சையதலி பாத்திமா தாயை கண்டித்ததில் இருவருக்கும் தக்ராறு ஏற்பட்டது. இதுகுறித்து, சகாயமேரி, சையதலி பாத்திமா இருவரிடம் பேச்சிவார்த்தையில் ஈடுப்பட்டபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நான் அடித்ததில், சையதலி பாத்திமா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி சடலத்தை அடக்கம் செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் போலீசார் இவரை திருப்பூர் அழைத்துசென்றனர். அங்கு சையதலி பாத்திமா புதைக்கப்பட்ட இடத்தை காட்டினார். இதுபற்றி திருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் இதுபற்றி சகாயமேரியிடம் விசாரித்து வருகின்றனர். பின்னர், சேவியர் அருளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அடுத்தடுத்து மூன்று கொலைகளை செய்துவிட்டு, சாதரணமாக ஊருக்குள் சுற்றிவந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட மணிரத்னம் மகன்..!

Mon Mar 23 , 2020
இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த சில நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் மகன் நந்தன், கடந்த சில நாட்களாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் இவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணாடி அறையில் தனிமைப்படுத்திக்கொண்ட தனது மகனுடன் உரையாடுவதை அவர் […]
202003221635055322 Tamil News Mani Ratnams son self quarantines against Coronavirus SECVPF

You May Like