UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

இந்தியாவில் முதன்முறையாக கொரானாவிற்கு புதிய சிகிச்சை முறை..

கொரானா பாதிப்புக்கு இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அறிமுகப்பட்டுத்தப்பட உள்ளது.
kerala corona

கொரானாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட்  செல்களால் சுரக்கப்படும் கொரானா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்த சிகிச்சைமுறை இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.

கொரானா நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்.

நோயில் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு முறை கொரானா இருக்கிறதா என்று பரிசோதனை, பிறகு எலிசா சோதனை ஆகியவை நடத்தப்பட்ட பிறகும், அவரது ரத்தம் தூய்மையானதா என்பதைத் தீர்மானிக்க இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள திட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டபிறகே கொடையாளி உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்.

இதற்கான சோதனைமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இது முடிந்து இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

201911080504510876 New offer for home buyers Central government notice SECVPF

அதன் பின்னர் மருத்துவமனைகளில் இது சோதனை அடிப்படையில் நடைமுறைக்கு வரும் என சென்னையில் இருக்கும்  தேசிய தொற்றுநோய் தடுப்பு கழக இயக்குநர் மனோஜ் முர்கேகர் தெரிவித்துள்ளார்.சிகிச்சையை பின்பற்றி சீனாவில் தீவிர கொரோனா நோயாளிகள் 10 பேருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் கொரானா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கும் முறை மிக விரைவில் தொடங்குகிறது. இதற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் எந்த நேரத்திலும் வழங்குவார் என கூறப்படுகிறது.

கேரளாவில் ஸ்ரீசித்திரை திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் 4 மருத்துவக்கல்லூரிகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1newsnationuser4

Next Post

கொரானா நிவாரணம்: அள்ளிக் கொடுத்த டிக்டாக்..

Sat Apr 11 , 2020
கொரானா வைரஸ் நிவாரண நிதியாக 250 மில்லியன் டாலர் அதாவது இந்தியா மதிப்பில் 1, 898 கோடி ரூபாயை வழங்கி உள்ளது டிக்டாக் நிறுவனம். உலகம் முழுவதும்  200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், இதைகட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் உள்பட  பல நாடுகளும் கடுமையாக போராடி வருகின்றன. இதனிடையே, உலகம் முழுவதும் கோடிகணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவானம் டிக்டாக். இந்த செயலி மீது இளைஞர்களுக்கு அதிக […]
tiktok 796x419 1

You May Like