மகிழ்ச்சி.‌.! நாளையுடன் முடியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு…! 26-ம் தேதி முதல் கோடை விடுமுறை…!

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளது. வரும் 26 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடப்பாண்டு 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.

முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் ஏப்ரல் 6 முதல் 13-ம் தேதிக்குள் திருத்தி முடிக்கப்படும். பின்னர் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படும். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியிடப் படும். மேலும் வரும் 26 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. முதலில் மொழி பாடமான தமிழ் தேர்வு நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

Stalin: இதுமட்டும் நடக்கக்கூடாது!… தமிழ்நாடு அடுத்த காஷ்மீராக மாறிவிடும்!… முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்!

Sun Mar 24 , 2024
Stalin: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கண்ணுக்கு முன் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு அங்கு. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் இருக்கும் நிலைமையேதான் தமிழகத்திற்கும் வரும் என்று என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருவாரூர் அருகே கொரடாச்சேரி அடுத்த ஊர்குடியில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் முரசொலி, நாகை லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, லோக்சபா தேர்தலை பா.ஜ., […]

You May Like