பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…

அன்று ‘சுய ஊரடங்கு’.. இன்று என்னவாக இருக்கும்..? கொரோனா தொடர்பாக இன்று மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி..

இந்தியாவில் கொரோனாவால் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மீண்டும் மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

modi

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோய காரணமாக உலகம் முழுவதும் 3.8 லட்ச பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 16,558-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் சுமார் 500 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து இன்று (24.03.2020) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இரண்டாவது முறையாக நாட்டு மக்களிடம் மோடி உரையாட உள்ளார். கடந்த வாரம் இதுதொடர்பாக பேசிய மோடி ஜனதா ஊரடங்கு எனப்படும் 14 மணி நேர சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி நேற்று முன் தினம் நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்தனர்.

மேலும் கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவ துறையினருக்கும் நன்றி கூறும் விதமாக, கைதட்ட வேண்டும் என்றும் மோடி கூறியிருந்தார். ஆனால் மக்கள் ஆர்வ மிகுதியில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூட்டம் கூட்டமாக கூடி கைதட்டியதால், எந்த நோக்கத்திற்காக சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அது நிறைவேறாமல் போனது என்ற விமர்சனம் எழுந்தது.

janata-curfew

இதனால் கொரோனா பரவுதலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை பலரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்று நேற்று மோடி கவலை தெரிவித்திருந்தார். அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள் என்றும், விதிகளும், சட்டங்களும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

இனி மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. தற்போது தமிழகத்தில் 38 மாவட்டங்கள்..

Tue Mar 24 , 2020
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 31-ம் தேதி வரை நடைபெற இருந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கொரோனா பீதி காரணமாக இன்றுடன் நிறைவடைகிறது. கொரோனா முன்னெச்சரிக்க தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார். அதன்படி இன்று மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. […]
mayiladuthurai

You May Like