அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

நவம்பர் மாதம் வரை ரேசன் பொருட்கள் இலவசம்..மேலும் பல அறிவிப்புகள் – பிரதமர் மோடி

அன்லாக் 2.0 எனும் பெயரில் ஊரடங்கின் 2ம் கட்ட தளர்வுகள் நாளை தொடங்க உள்ள நிலையில், கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கைமீறி செல்ல அரசு விட்டுவிடவில்லை- பிரதமர் மோடி பேச்சு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதோடு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளால் அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு குறைவாக உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவை நமது நாடு சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.

ஊரடங்கை மக்கள் பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. தளர்வுகளால் பலர் மாஸ்க் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருக்கிறார்கள்.

ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகள் தொடங்கி உள்ளன. மழைக் காலம் தொடங்க உள்ள சூழலில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த காலத்தில் சளி காய்ச்சல் வரும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முன்பைவிட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

Corona COVID 19 Awareness Duty Review During Corona COVID 19

கொரோனா விதிமீறலுக்காக ஒரு நாட்டின் பிரதமருக்கு கூட அபராதம் விதிக்கப்பட்டதை பார்த்தோம். பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டிலும் ஒரே விதிதான். சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும்.

நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. இதற்காக மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்ககு 1.75 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், நவம்பர் மாதம் வரை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ கடலைப்பருப்பும் வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். அதேசமயம் நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

தமிழக அமைச்சருக்கு கொரோனா பாசிட்டிவ் : 2-வது பரிசோதனையில் தொற்று உறுதி..

Tue Jun 30 , 2020
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எம்.எல்.ஏக்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பாகுபாடின்றி கொரோனா பரவி வருகிறது. இந்த சூழலில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சென்னை மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா […]
அரியர்

You May Like